திருச்சியில் குறைந்த விலையில் வாசிங் மெஷின்
நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கேற்ற தரமான வாசிங்மெஷின் திருச்சியில்...
நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளில் வாசிங் மெஷின் வாங்கும் கனவை நிறைவேற்ற செல்லும் எளிய வழி தவணை முறை. தவணை முறையில் வாசிங் மெஷின் வாங்க வேண்டுமென்றால் முன்பணம் ரூ.5,000 கட்ட வேண்டும். ஆனால் ஐயாயிரத்திற்கும் குறைவாக ஒரு வாஷிங் மெஷின் மார்க்கெட்டில் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தேவி லெக்ஷ்மி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் தான் இந்த குறைந்த விலை வாஷிங் மெஷினை தயாரித்து வழங்குகிறது. DLI என்ற வாஷிங் மெஷின் குறித்து, திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் விற்பனை உரிமம் பெற்றுள்ள ஸ்ரீ பொங்காளியம்மன் ஏஜென்ஸி உரிமையாளர் தண்டபாணி நம்மிடம் கூறுகையில்,
“எங்களது DLI வாஷிங் மெஷின் 6 கிலோ, 8 கிலோ என்ற இரண்டு அளவுகளில், இரண்டு வண்ணங்களில் உள்ளது. வீட்டில் இடத்தை அடைக்காத, குறிப்பாக சிறிய வீடுகளில் வசிப்போர் கூட இதை வாங்கி பயன்படுத்துவது எளிது.
8 கிலோ வாஷிங் மெஷினில் ஒரே நேரத்தில் 8 சட்டை அல்லது 3 சேலை அல்லது 4 பேண்ட், 3 சட்டை என்ற அளவில் போட்டு துவைக்கலாம். ஒன்றரை பக்கெட் தண்ணீர் ஊற்றினால் போதும். தண்ணீர் செலவு குறைவு. அதே போல் மின்சார பயன்பாடும் மிகக் குறைவாக இருக்கும். 8 கிலோ வாஷிங் மெஷின் 165 வாட்ஸ் மின்சாரம் போதுமானது. அதனால் இன்வெர்ட்டர் இருக்கும் வீடுகளில் மின்துண்டிப்பு ஏற்பட்டாலும் இன்வெர்ட்டரில் இயங்கும். தரமான ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதால் தண்ணீரினால் அடிபாகம் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது.
ஓரு வருடம் வாரண்டி தருகிறோம். விற்பனைக்கு பின்பான சர்வீஸ் செய்து தருகிறோம். ஓராண்டில் இது வரை 200க்கும் மேற்பட்ட வாஷிங் மெஷின் விற்பனை செய்துள்ளேன். எந்தவித புகாரும் வரவில்லை. எளிமையாக கையாளக் கூடிய அழகிய வடிவத்தில், வீட்டில் இடத்தை அடைக்காத, குறைவான தண்ணீர், குறைவான மின் பயன்பாடு கொண்ட இந்த வாஷிங் மெஷினை வாங்க விரும்வோர்க்கு எங்கள் அலுவலகத்தில் டெமோ செய்தும் காண்பிக்கிறோம்.
திருச்சி, அரசு மருத்துவமனைக்கு பின்புறம் வயலூர் செல்லும் சாலையில் அலுவலகம் உள்ளது. 94438- 21058 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு எங்கள் அலுவலகம் வாருங்கள். குறைவான விலையில் வாஷிங் மெஷின் வாங்கலாம்” என்றார்.