மார்ச் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.23 லட்சம் கோடி
‘2021, மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,23 கோடி வசூலானது. இதில் மத்திய ஜி.எஸ்.டி வரியாக ரூ.22, 973 கோடியும், மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.29,329 கோடியும் வசூலானது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியாக ரூ.62,842 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.8,757 கோடி வசூலானது.
ஜிஎஸ்டி வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த மார்ச் மாதம் வசூலான தொகைதான் அதிகபட்சமாகும். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜி.எஸ்.டி. வரியை விட 2021 மார்ச் மாதம் வசூலான தொகை
27 சதவீதம் அதிகமாகும்“.