சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு லாபம் தரும் புதிய தளம் டிஜிசெல்
ஆஹா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் புதிதாக டிஜிசெல் என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. டிஜிசெல் தளமானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கென உருவாக்கப்பட்டது. தங்களது தொழில் இடையூறின்றி நடக்கவும், தகவல்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புதிய சந்தைகளை சென்றடைய இந்த தளம் உதவுகிறது.
டிஜிசெல் தளமானது எளிதில் பயன்படுத்தும் வகையில் பன்முக வடிவமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தகவலும் தனித்தனியாக பராமரிக்கப்படும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் பற்றிய தகவல் மற்றொருவருக்குத் தெரியாது. அவரால் தெரிந்து கொள்ள முடியாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி.
ஒரு தொழில் முனைவோருக்கு இ&-ஸ்டோரை தனியாக உருவாக்கி பராமரிப்பதைக் காட்டிலும் டிஜிசெல் மூலம் விற்பனையை செய்வது பல மடங்கு லாபகரமானதாக இருக்கும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக இதை இலவசமாக உபயோகித்துப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், தங்களுக்கு எத்தகைய மாறுதல்கள் தேவை என்பதை இதைப் பயன்படுத்திப் பார்த்து தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு செல்வது மற்றும் இதை மேம்படுத்துவது, இதில் மேம்பட்ட வெர்ஷனை பெறுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்களது தயாரிப்பு சார்ந்த விவரங்களை, தொழில்நுட்ப தகவல்களை இதில் பட்டியலிட முடியும். தங்கள் தயாரிப்பு குறித்த விவரங்களை அளித்து வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
ஏற்கெனவே அவர்கள் பயன்படுத்தும் டேலி போன்ற சாஃப்ட்வேரிலிருந்து இதை எளிதாக இணைத்து பயன்படுத்த முடியும். இது தவிர எஸ்ஏபி, இஆர்பி அல்லது இது போன்ற பிற சாஃப்ட்வேர் அப்ளிகேஷனுடனும் இதை இணைத்து செயல்படுத்தலாம்“ என இந்நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான அசோகன் சட்டநாதன் தெரிவித்தார்.