Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி என்.ஐ.டி.யில் முதுநிலை ஆங்கில பட்டப்படிப்பு..! விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி தேதி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி என்.ஐ.டி.யில் முதுநிலை ஆங்கில பட்டப்படிப்பு..!
விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி தேதி..!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020ன்படி கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கிடையே வேறுபாடுகளை களையும் வகையில். திருச்சி என்ஐடியில் கடந்த ஆண்டு முதுநிலை ஆங்கிலம் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இப்படிப்பு மாணவர்களுக்கு நடைமுறை பாடத்திட்டத்தை உயர் தொழில்முறைக் கல்விக்கேற்ப வழங்குகிறது. மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு தங்களின் நுண் சிந்தனை மற்றும் படைப்பாக்க சிந்தனை திறன்களுடன் உயர் தரவரிசை சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ளளலாம். திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) 2021-22ம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். ஏப்.30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சம்ர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு maenglishnitt@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 9486001130 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம். http://admission.nitt.edu/ma2021என்ற இணைய தளத்திலும் அறியலாம் என திருச்சி என்ஐடி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.