3 வருடத்தில் ரூ.9 லட்சத்துக்கும் மேல் லாபம்.. முதலீடு எவ்வளவு தெரியுமா?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சமீபத்திய காலமாக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக மிகப்பெரிய இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகின்றன.
எனினும் இதில் ரிஸ்க் அதிகம் என்ற எண்ணமே பலரின் மத்தியிலும் உள்ளது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் தேவை அறிந்து அதற்கேற்ப ரிஸ்க் குறைவான திட்டங்களும் உள்ளன. இதன் மூலம் கணிசமான லாபம் கொடுக்கும் சில சிறப்பு திட்டங்களும் உள்ளன. நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்- டைரக்ட் பிளான் (Canara Robeco Small Cap Fund – Direct Plan) என்பது ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்- டைரக்ட் பிளான் கடந்த பிப்ரவரி 2019ம் ஆண்டு தொடங்கப்பட ஒரு திட்டமாகும். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கணிசமான லாபத்தினை கொடுத்து வருகின்றது. இந்த ஃபண்டிற்கு வேல்யூ ரிசர்ச் நிறுவனம் 5 ஸ்டார் ரேட்டிங்கினை கொடுத்துள்ளது. எஸ்ஐபி மதிப்பீடு கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் முதலீட்டாளர்களுக்கு 45% அதிகமான வருடாந்திர லாபத்தினையும் கொடுத்துள்ளது. எஸ்ஐபி கணக்கீட்டின் படி, இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 6.87 லட்சம் ரூபாயாகும். இதன் முலம் வருடாந்திர வருமானம் சுமார் 46.78% ஆகும்.
இதே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 9.78 லட்சம் ரூபாயாகும். இதே 1 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 2.58 லட்சம் ரூபாயாகும். ஒரு வருடத்தில் 23.9% லாபம் கிடைத்திருக்கும். மொத்தத்தில் மூன்றே ஆண்டுகளில் நல்லதொரு வருமானம் கிடைத்திருக்கும்.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்- டைரக்ட் பிளான் ஆனது, 93.03% உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ளது. அதில் 2.42% லார்ஜ் கேப் ஃபண்டுகளிலும், 16.16% மிட் கேப் ஃபண்டுகளிலும், 56.64% ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய போர்ட்போலியோ பங்குகள் ஷேப்லர் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, கேன் ஃபின் ஹோம்ஸ், செரா சானிட்டரிவேர்ம், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், மைண்ட் ட்ரீ பொன்ற போன்ற சில முக்கிய பங்குகள் இதன் போர்ட் போலியோவில் அடங்கும்.