இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?
மத்திய அரசு உஜ்வாலா 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எரிவாயு சிலிண்டர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் விண்ணப் பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்.பி.ஜி. கணக்கு ஏதும் இருக்க கூடாது என்பது முக்கியம்.
நீங்கள் இலவச எரிவாயு சிலிண்டர் பெற விரும்பினால் www.pmuy.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். படிவத்தில் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு விபரம், ஆதார் நம்பர் போன்ற விபரங்களைப் பதிவிடுவதோடு, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளதற்கான அட்டை, (பி.பி.எல் கார்டு), வங்கியில் சேமிப்புக் கணக்கு, ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவறையும் வழங்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு எரிவாயு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்