NEFT, RTGS, IMPS, UPI பணம் அனுப்ப சிறந்த வழி எது?
ரூ.1லட்சத்துக்கும் குறைவான உடனடி நிதி பரிமாற்றங்களுக்கு, UPI சிறந்தது. ஏனெனில் கட்டண பரிமாற்றங்கள் இலவசம். ஐ.எம்.பி.எஸ் என்பது, ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் நிதியை மாற்றுவதற்கான மற்றொரு சிறந்த பேமெண்ட் முறையாகும். ஆனால் அதிகபட்சம் ரூ. 2 லட்சத்துக்குள் மட்டுமே அனுப்ப முடியும்.
NEFT என்பது வங்கிக் கிளை மூலம் பணம் அனுப்புவதற்கான விரைவான வழியாகும். இது எதிர்கால கட்டணங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது கடன் அட்டை கட்டணங்களுக்கு ஏற்றது. ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிமாற்றத்திற்கு RTGS சிறந்தது.