தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாநகர மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் !
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட நிர்வாக வசதிக்காக மாநிலத்தலைவர் .A.M.விக்கிரமராஜா வின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகர மாவட்ட தலைவராக திரு.S.R.V. கண்ணன், செயலாளராக ஸ்ரீரங்கம் திரு.S.ராஜன் பிரேம்குமார், பொருளாளராக திரு.V.P.ஆறுமுகப் பெருமாள் உள்ளிட்டோரை மாநில பொதுச்செயலாளர் திரு.Ve.கோவிந்தராஜூலு நியமித்தார்.
இக்கூட்டம் திருச்சி மண்டல தலைவர் திரு.M.தமிழ்ச் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் திரு.V.ஸ்ரீதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செந்தில்.N.பாலு, மாவட்ட பொருளாளர் A.தங்கராஜ், இளைஞரணி தலைவர் திரு.AMP.அப்துல் ஹக்கீம், செயலாளர் திரு.KMS மைதீன், பொருளாளர் திரு.பா.திருமாவளவன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.