பொதுவாக வருமான வரி தாக்கலின்போது புதிய வரி கொள்கை, பழைய வரி கொள்கை என இரண்டு வகை உண்டு எதை தேர்வு செய்து தாக்கல் செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்படும்.
பெரும்பாலும் புதிய வரி கொள்கை முறையே “டிபால்ட்” முறையில் பின்பற்றப்படும். நீங்கள் தான் பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் செய்யும் ஒரு சில தவறுகள், வருமான வரி தாக்கலின் போது தேவையில்லாத அபராதங்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக வருமானத்தை குறைத்தும் மறைத்தும் தாக்கல் செய்து இருந்தால் சட்டப்பிரிவு 270- ஏ படி, வருமான வரியில் இருந்து 50% தொடங்கி அதிகபட்சமாக 200 % வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய வருமான வரி கொள்கையின்படி இன் சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.
கீழ்க்கண்ட காரணங்களால் அபராதம் விதிக்கப்படலாம்:
உண்மைகளை மறைத்தல்,
முதலீட்டை மறைப்பது,
போலியான செலவினங்களை உருவாக்குவது,
வங்கி கணக்கில் வந்த பண பரிவர்த்தனையை வராதது போல் சித்தரிப்பது,
முதலீடு அல்லது சேமிப்பு ரீதியில் உங்களுக்கு வந்திருக்கும் சர்வதேச பண பரிவர்த்தனைகளை மறைப்பது
இவை அனைத்தும் அபராதத்திற்குரிய செயல்களாக கருதப்படும்.