2 லட்சம் பேருக்கு புதிய வேலை இந்த லிட்ஸ்ல நீங்க இருக்கீங்களா?
சென்னையைக்கு அருகில் உள்ள எண்ணூர், ஒரகடம் மட்டும் இல்லாமல் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களைச் சுற்றி ஏராளமான ஆட்டோ மற்றும் பிற துணைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் ( SIPCOT)மாநிலத்தில் 11 புதிய தொழில் பூங்காக்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலமாக மாநிலத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ரிறிவிநி தெரிவித்துள்ளது.
1997ஆண்டு முதலே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும் முதல் மாநிலம் தமிழகம் ஆகும். இதன் விளைவாக தமிழகத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மாநிலத்தில் மென்பொருள் ஏற்றுமதி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைத் தொழில்துறை அளித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில், கனரக வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பிஎம்டபிள்யூ, ரெனால்ட் நிசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முக்கிய திட்டங்களை தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூர், ஒரகடம் மட்டும் இல்லாமல் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களைச் சுற்றி ஏராளமான ஆட்டோ மற்றும் பிற துணைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம், ஆட்டோமொபைல், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பல துறைகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 11 புதிய தொழில் பூங்காக்களை நிறுவும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதனால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் ஒவ்வொரு பூங்காவும் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவடையும்.தற்போது, தமிழ்நாட்டில் 21 தொழிற்துறை வளாகங்களும், 12 மாவட்டங்களில் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உள்ளன.
ராமநாதபுரம், தூத்துக் குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தேனி, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில், உலகளாவிய திறன் மையங்கள் குறித்த கொள்கையை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய திறன் மையங் களை அமைப்பதில் அரசு சிறப்பு கவனம் செலுத்த விரும்புவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் உலக அளவில் பரவலாக உள்ள பல்வேறு அம்சங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சைபர் பாதுகாப்புக் கொள்கை, பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைகள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலுள்ள நிர்வாகச் சிக்கல்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம் படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.