ஸ்டார் அலையன்சுக்கு புதிய தலைவர்
ஏர் இந்தியா பங்கு வகிக்கும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன கூட்டமைப்பான ஸ்டார் அலையன்சின் புதிய செயல்குழு தலைவராக ஸ்காட் கிர்பி நியமிக்கப்பட்டுள்ளார். விமான போக்குவரத்து நிறுவனங்களின் 3 சர்வதேச கூட்டமைப்புகளில் மிகப்பெரிய அமைப்பான இது 1997ல் தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் ஏர்இந்தியா உள்பட 26 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.