Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொழில்முனைவோருக்கான புதிய தொடர்…. 8

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தொழில்முனைவோருக்கான புதிய தொடர்…. 8

ஜெயிக்கத் தேவை.. துல்லியமான கற்பனை!
ஆசிரியர் என்பவர் வாழ்க்கையை சொல்லித் தருவார். குரு என்பவர் வாழ்ந்து காட்டுவார். அப்படிப்பட்ட Modern Business Guru ஒருவரை நாம் சந்திக்கப் போகிறோம்.

ஒரு விதை மண்ணில் விழுந்து, புதைந்து முட்டி மோதி வளர்ந்து, செடியாகி, மரமாகி பரந்து விரிந்து ஆலம் விழுதாய் இருப்பதை பார்க்கப் போகிறோம். தொழிலில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் இக்கட்டுரை ஒரு உற்சாக டானிக்காக இருக்கும்.

C.K. ரெங்கநாதன்

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஆம், வணிக வித்தகர் கவின்கேர் C.K.ரெங்கநாதன் அவர்களைத் தான் பார்க்கப் போகிறோம். அவரைப் பற்றி சொல்வதற்கு முன் அவரது தந்தையாரிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

திரு.சின்னி கிருஷ்ணன், கணித ஆசிரியர். ஏதாவது மக்களுக்கு பயன்படும் வகையில் கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் முயற்சியிலேயே எப்போதும் இருப்பார். அப்போதெல்லாம் எந்த ஒரு பொருளும் மக்கள் அவர்கள் தேவைக்கானதை மட்டும் வாங்க முடியாது, கடையில் என்ன அளவுகளில் விற்கிறார்களோ அதைத் தான் வாங்க முடியும்.

உதாரணத்திற்கு நமக்கு ஷாம்பூ வேண்டுமென்றால் குறைந்தது 250 கிராம் பாட்டில் தான் கிடைக்கும், நமக்கு 20 கிராமோ, 50 கிராமோ வேண்டுமென்றால் கிடைக்காது. நம் தேவை போக மீதியெல்லாம் வீணாகும். திரு.சின்னி கிருஷ்ணன் முதன்முதலில் சாஷே பாக்கெட்டுகள் செய்யும் முறையை கண்டுபிடித்தார். அதை அனைத்து பேக்கிங் வகைகளுக்கும் பயன்படுத்தும் உத்தியை உருவாக்கினார்.

சொந்தமாக ஷாம்பூ உற்பத்தி செய்து சாஷே பாக்கெட்டுகளில், சிறிய அளவுகளில் விற்க ஆரம்பித்தார். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திரு. சின்னி கிருஷ்ணன் இறந்தார். அவரது தொழிலை சிரிஸின் இரண்டு அண்ணன்களும் சேர்ந்து தொடர்ந்து நடத்தினர்.

தந்தையின் தொழிலை அடுத்த கட்டத்திற்கு இருவரும் கொண்டு சென்றனர். CKR படிப்பை முடித்து அண்ணன்களுக்கு உதவியாக தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குடும்ப தொழிலாக இருந்தாலும் இவரால் ஓரளவிற்கு மேல் அண்ணன்களை கடந்து செயல்பட முடியாமல் போனது. எனவே, தனது எண்ணங்களை வடிவாக்க விரும்பி தனியே தொழில் செய்ய விரும்பினார்.
குடும்பத்திலிருந்து வெளிவந்து தன்னுடைய தனிப்பட்ட சேமிப்பு தொகை ரூ.15,000த்தை கொண்டு 1983 ல் Chik India என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

அப்போது வெல்வெட் ஷாம்பூ மார்க்கெட்டில் நன்றாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. வெல்வெட் ஷாம்பூ மார்க்கெட்டிங்கை கோத்ரெஜ் நிறுவனம் வெற்றிகரமாக கையாண்டது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

சிக் ஷாம்பூ விற்பனை ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டது. CKR பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார். சிக் ஷாம்பூ ஐந்து காலி பாக்கெட்டுகளை கொடுத்தால் ஒரு ஷாம்பூ பாக்கெட் இலவசம் என்ற திட்டம் வெற்றிகரமான விற்பனையை கண்முன் கொண்டு வந்தது. திரை நட்சத்திரங்களை விளம்பரத்தில் கொண்டு வந்தது விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. மாதம் ரூ.35,000 என்றிருந்த விற்பனை ரூ.12,00,000மாக உயர்ந்தது.

1993ல் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த Excise Duty தொடர்பான சலுகைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத சூழல் உருவானது. இந்த நேரத்தில் CKR இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று கம்பெனியை விற்றுவிடுவது, இரண்டு கம்பெனியை தொடர்ந்து நடத்துவது.

இரண்டாவது முடிவை CKR தைரியமாக எடுத்தார். மிகவும் திறமையான நபர்களை IIMலிருந்து கொண்டு வந்து நிறுவனத்தை சிறப்பாக செயல்பட வைத்தார். தொழில் சிறிதாக இருந்த காலகட்டத்திலேயே R&Dக்காக &.4 கோடி முதலீடு செய்தார். அது நிறுவனத்திற்கு நல்ல பலன்களை தந்தது.

நிறுவனத்தை 1998ல் Cavin Kare Private Ltd என்று உருமாற்றி அடுத்த உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றார். 2008ல் Maa என்ற குளிர்பானத்தை தனது நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்தார். ஆரம்பத்தில் நல்ல விற்பனையை சந்தித்த நிறுவனம், தொடர்ந்து விற்பனை சரிவை சந்தித்தது.

புதுப்புது பொருட்களை அறிமுகப்படுத்தினார். நான் தோற்க ப் போவதில்லை, நான் ஜெயிப்பேன், வாய்ப்புகளை உருவாக்குவேன், வாய்ப்புகளை பயன்படுத்துவேன் என்று உறுதியாய் பயணப்பட்டதை இப்போதும் நினைவு கூறுகிறார்.

ரூ.15,000த்தில் ஆரம்பித்த பயணம் இன்று ஆண்டிற்கு ரூ.1,300 கோடி விற்றுமுதலை கடந்து கொண்டி ருக்கிறது. தற்போது இவரது சொத்து மதிப்பு ரூ.410 கோடி.
Fortune India 500 கம்பெனிகளின் வரிசையில் தற்போது 183வது இடத்திலிருக்கிறது கவின்கேர் நிறுவனம். Chik, Meera, Karthika, Nyle, Indica, Spinz, Fairever, Bacto-V, Green Trends போன்ற பல பிராண்டுகள் இவரது கவின்கேர் நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது. இவரின் வெற்றிக்கான பார்முலா எல்லோருக்குமானது. அதை அவரே சொல்கிறார்.

“தொழில் தொடங்குவதற்கு மூலதனம் வேண்டும் தான், அதைவிட முக்கியம் மூளை தனம். ஆம், தெளிவான ஐடியா, வெற்றி இலக்கை பற்றிய தெளிவு, அப்போது தான் அதை நோக்கிய பயணம் உறுதியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் ஜெயிக்க துல்லியமான கற்பனை வேண்டும். அது என்ன துல்லியமான கற்பனை..? நான் பணக்காரனாக வேண்டும், கார் பங்களா வேண்டும் என்பதற்கான அடுத்த கட்டம்.
“எனது கார் Benz C-Class கருப்பு நிறம், பிரவுன் கலரில் லெதர் சீட்ஸ், இனிமையான மியூசிக் சிஸ்டம், மிடுக்கான வெள்ளை யூனிஃபார்மில் டிரைவர், அந்த கார் எனக்காக மிதந்து வருகிறது. நான் அதில் ஏறி அலுவலகம் செல்கிறேன்.”

நமது கற்பனையை துல்லியமாக்குவது தான் இது. மனதின் துல்லிய கற்பனையோடு, அதை நோக்கி செயல்பட்டால், அது நடந்தே தீரும். அதற்கு தேவைப்படுகிற வெறி உடலுக்குள் புகுந்துவிட்டால் ஆளை தூங்கவிடாது. என்னால் முடியும் என்று நம்புகிறீர்களா… தினந்தோறும் அது கண்ணில்படும்படி பெரிதாக எழுதி ஒட்டிவிடுங்கள். அதைப் பார்க்க, பார்க்க வெறி உண்டாகும். மனிதனின் பொருளாதார வளர்ச்சி என்பது மனதில் இருந்து மூளைக்கு போவது ! மூளையை பயன்படுத்துங்கள். தினமும் சிந்தியுங்கள்.. வெற்றி உங்கள் காலடியில் மண்டியிடும் என்கிறார் சிரிஸி. நான் இப்படித்தான் ஜெயித்தேன் என்று இப்போதும் புதிய தொழில் முனைவோர்களுக்கு உற்சாக டானிக் கொடுக்கிறார் இவர்.

பெரும்பாலான தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி குறித்து வகுப்புகள் எடுத்து, ஆலோசனைகளும் வழங்கி உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த புன்னகை மன்னன்.

தொடர்ந்து, வரும் இதழில், நம் அருகில் உலவிக்கொண்டிருக்கும் தொழில் விற்பன்னர்களை சந்திப்போம்.

கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை
imagefelixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.