பரிசும் வேணா…. கூட்டமும் வேணாம்… அரசு உத்தரவு
தமிழக அரசின் நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: எல்லா பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மறு உத்தரவு வரும் வரை பரிசு, பூங்கொத்துகள், சால்வைகள், நினைவு பரிசுகள், மாலைகள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது.
மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட கூட்டங்கள், கருத்துப்பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஆய்வுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது. மதிய உணவு, இரவு உணவு மற்றும் பொழுதுபோக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.