போஸ்ட் ஆபிஸ் சந்தேகங்களுக்கு இனி ஒரே ஒரு போன் கால் போதும்…
போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா.. சேமிப்பு கணக்கு குறித்து, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி ஆகிய சந்தேகங்களுக்கு இனி போஸ்ட் ஆபிஸ் சென்று அலைய தேவையில்லை. வீட்டிலிருந்தே ஒரே ஒரு போன் காலில் உங்களது சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
இந்திய தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு IVR சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868 என்ற நம்பரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.