டெபிட் கார்டு மறந்துட்டிங்காளர… இனி நோ டென்ஷன்…
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி PNB One என்ற சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் மூலம் டிஜிட்டல் டெபிட் கார்டு உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டெபிட் கார்டை மறந்து விட்டால் இனி பயமில்லை. இச்சேவையின் மூலம் உடனடியாக டிஜிட்டல் டெபிட் கார்டு மூலம் எவ்வித பணபரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம்.
டிஜிட்டல் டெபிட் கார்டு பெற உங்கள் மொபைலில் (PNB One) ஆப்-யை டவுன்லோடு செய்து கொண்டு அதில் ‘Request Virtual Card’ யை தேர்வு செய்து பின்னர் Debit Card செலக்ட் செய்து உங்கள் அக்கவுண்ட் நம்பர் மற்றும் டெபிட் கார்டு வகையை தேர்வு செய்து Virutal Card ஆக்டிவேட் செய்வதற்கு அனுமதி கொடுக்கவும். இதற்கு உங்கள் Transaction Password பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் டிஜிட்டல் டெபிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.