அறிய வேண்டிய விஷயம் டாக்ஸ் ரெசிடென்ஸி சர்டிஃபிகேட்
“பொதுவாக, வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் 183 நாள்களுக்குமேல் வசித்தால் அவர் ‘ரெசிடென்ட்’ என்று கூறப்படுவார். அவரது இந்திய வருமானம் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் வரும் வருமானமும் இந்தியாவில் சேர்க்கப்பட்டு அதற்கான வரியைச் செலுத்த வேண்டும். ஆனால், மற்ற நாட்டில் செலுத்தப்பட்ட வரியைக் கழித்து மீதி வரியைச் செலுத்தினால் போதுமானது.
இதுவே அவர் இந்தியாவில் 182 நாள்களுக்கும் குறைவாக இருந்தால், மற்ற நாட்டிலிருந்து பெறும் வருமானத்துக்கு இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை. மற்ற நிபந்தனைகளும் பொருந்தும். மற்ற நாட்டில், இத்தனை நாள்கள் வசித்தார் என்பதற்கான சான்றிதழ்தான் டாக்ஸ் ரெசிடென்சி சர்டிஃபிகேட்.
இதை வசித்த நாடுகளிலிருந்து பெற்று வரி இலாகாவுக்கு ஆவணமாகக் கொடுக்க வேண்டும்.