ஆன்லைன் உலகம் என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், `ஆன்லைனில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்பவர்களுக்குப் பணம் கொடுக்கப்படும்’ என்று மோசடி கும்பல் வலை விரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை நம்பி புனேவை சேர்ந்த 64 வயது முன்னாள் ராணுவ வீரர் தன்னிடமிருந்த அனைத்து சேமிப்புகள், ரிடையர்டுமென்ட் பணம் என மொத்தம் ரூ.1 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பகுதி நேர ஆன்லைன் வேலையில், கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை செய்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டு ஈர்க்கப்பட்டவர், அந்த மெசேஜ் அப்ளிகேஷனை கடந்த ஆண்டு பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்த அப்ளிகேஷன் மூலமாக ஏற்கன வே குழுவில் உள்ள சிலருடன் இவருடைய எண் இணைக் கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எளிமையான ஆன்லைன் டாஸ்க் கொடுக்கப்படும், அதைச் செய்து முடிப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படும் என வெளிநபரிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது.
இந்த டாஸ்க்கிற்கு இவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ப ணம் பெற வீடியோ பகிர்வு தளத்தினை அனுப்பி, லைக் பட்டனை கிளிக் செய்யச் சொல்லி இருக்கின்றனர். அதனை கிளிக் செய்தவருக்குச் சிறிய பணம் வந்துள்ளது. ப்ரீபெய்டு டாஸ்க்கிற்கு ரூ.1,000 கட்டும்படி கூறியுள்ளனர்.
இப்படிக் கட்டினால் அதிகமான பணத்தை திரும்பப் பெற முடியும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் தன்னுடைய பணத்தை சிறுக சிறுக செலுத்தி உள்ளார். இப்படி தன்னுடைய சேமிப்புகள் 60 லட்சத்தை படிப்படியாக இழந்துள்ளார். தன்னுடைய மகனிடமிருந்து வாங்கிய 40 லட்சத்தையும் இழந்தார். அதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஒரே மாதத்தில் 10க்கும் மேற்பட்ட புகார்கள்
இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகை யில், பாதிக்கப்பட்டவர் டெபாசிட் செய்த பணம் 5 வங்கிகளில் உள்ள 12 கணக்குகளுக்கு சென்றுள்ளது. பிப்ரவரி முதல் மார்ச் கடைசி வாரத்தில் இதுபோன்ற மோசடிகள் குறித்து 10 புகார்கள் வந்துள்ளது. முன்னதாக, இதுபோன்ற வழக்கு `பகுதி நேர ஆன்லைன் வேலை மோசடி’ டெல்லியில் பதிவானது. சமூக ஊடக விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் வேலை தேடி, 9 லட்சத்தை ஒருவர் இழந்தார்.
மோசடி செய்பவர்கள் பணம் சம்பாதிப்பதாக உறுதியளித்து, எளிய ஆன்லைன் பணிகளில் பங்கேற்கும்படி புதிய நபர்களை கவர்ந்திழுக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் திட்டமிட்டு, ஆரம்பத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெற ஒரு சிறிய தொகையை செலுத்துகிறார்.
பின்னர், அவர்களிடம் அதிக வருமானம் கிடைக்கும் என்ற உறுதிமொழியுடன் ப்ரீபெய்டு பணிகளுக்குப் பணம் செலுத்துமாறு கூறுகின்றனர். அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை செலுத்துகின்றனர். இப்படி தொடரும் போது, பெரிய தொகையில் ஏமாற்றப்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.