திருச்சி காஜாமலை காலனி இ.வி ஆர் கல்லூரி அருகில் தென்றல் பாரதி அகாடமி உள்ளது .சுய தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக 30 நாட்களில் போட்டோகிராபி மற்றும் போட்டோஷாப் வேலைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.
இது குறித்து பயிற்சி மையத்தின் உரிமையாளர் பாரதிதாசன் அவரிடம் கேட்ட பொழுது சுய தொழில் தொடங்கு பவர்களுக்கும் கோடை காலத்தை பயனுள்ள முறையில் கடப்பதற்கும் இந்த பயிற்சி முகாம் பயன்படும்.
சுமார் ஐந்து ஆண்டு காலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடம் கட்டணம் செலுத்தி நான் கற்றுக் கொண்ட போட்டோகிராபி மற்றும் போட்டோஷாப் தொழில்நுட்பங்கள் குறித்து இங்கு 30 நாட்களில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கின்றேன். மற்ற பயிற்சி மையங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைந்த கட்டணத்தில் இப்பயிற்சியை வழங்குகிறேன்.
மேலும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகள் வழங்குகிறேன். 30 நாள் பயிற்சி முடிந்ததும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போட்டோகிராபி தொழில் குறித்து சிறந்த நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுவது தான் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார்.