பட்டுப்புடவை, பட்டு வேட்டி, சட்டை போன்ற பட்டினால் ஆன ஆடைகள் பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் இருக்கும். இது தவிர விலை உயர்ந்த ஆடைகளும் இருக்கும். இவற்றையெல்லம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே அவைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் பொலிவிழந்து போய்விடும். அப்படி உள்ள ஆடைகளை சிலர் ரோல் பாலிஷ் அல்லது டிரை வாஷிங் செய்வதற்கு கொடுப்பார்கள். அதனால் நீங்கள் இந்த ரோல் பாலிஷ் பிஸினஸை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
முதலீடும், மூலப்பொருட்களும்
ரோல் பாலிஷ் பிஸினஸ்க்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் ரோல் பாலிஷ் மிஷின், ஸ்டார்ச் பவுடர் மற்றும் பாலிஷிங் மிஷினின் விலை அதன் மாடலை பொறுத்து மாறு படும். இந்த மிஷின் ஆரம்ப விலை ரூ.13 ஆயிரம் ஆகும். வாங்கும் இடத்திலேயே இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படும்.
பயிற்சி தருவார்கள்
மேலும் ஸ்டார்ச் பவுடர் மற்றும் பப்ளிஷிங் திரவம் போன்றவை எந்தெந்த மாடல் ஆடைகளுக்கு எந்த அளவு அளிக்க வேண்டும் என்பதை பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும். இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் இருந்தால் நல்லது. இந்த ரோல் பாலிஷ் பிஸினஸிநாளன் லாபம் என்று பார்த்தால் நீங்கள் நிர்ண யிக்கும் விலையை பொறுத்து கிடைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு காட்டன் புடவை அல்லது காட்டன் சட்டைக்கு ரூ.40 கிடைக்கும்.
லாபம் அள்ளலாம்
பட்டுப்புடவை மற்றும் பட்டு சட்டைகளுக்கு ரூ.200 என்று விலை நிர்ணயிக்கிறீர்கள் என்றால் தோராயமாக ஒருநாளைக்கு 10 புடவை பாலிஷ் செய்வதற்காக உங்களிடம் வருகிறது என்றால் ரூ.2 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். அது 20 பட்டு புடவையாக இருந்தால் ரூ.4 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை ஆரம்பித்து வாழ்வில் வெற்றி காணுங்கள்.