இந்தியாவில் 35879 பேர் மட்டுமே தரமான தங்க நகை வியாபாரிகள்..!
கடந்த ஜூன் 16ம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது குறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், கட்டாய ஹால்மார்க் திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 256 மாவட்டங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 24 மாவட்டங்கள் உள்ளன. தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் 14, 18, 22 காரட் தங்கள் நகைகள் மட்டும் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 4 லட்ச தங்க நகை வியாபாரிகளில் 35,879 பேர் மட்டுமே பிஐஎஸ் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.