ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகளில் வாய்ப்பு..!
“இளம் தலைமுறை ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூ.200 கோடி மதிப்புள்ள திட்டத்தின் ஒப்பந்தப் புள்ளிக்கு ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களை அனுமதிக்கலாம். அவர்களுக்கு தொழில்நுட்ப அனுபவம் இருந்தால் போதும். நிதி தகுதி பார்க்க வேண்டியது அல்ல.
ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளை மறுக்கக் கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.