எல்ஐசியின் இதர வசதிகளை இனி வாட்ஸ்ஆப்பில் பெறலாம்!
வாட்ஸ் அப் மூலம் சேவைகள் இதர தகவல்கள் பெறும் வசதியை எல்ஐசி நிறுவனம் தொடங்கி உள்ளது.
எல் ஐ சி நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள பாலிசிதாரர்கள் எல்ஐசி நிறுவனத்தின் சேவைகள் மற்றும் இதர விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இனி whatsapp மூலமே தொடர்பு கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது இதற்காக 8976862090 என்ற தொலைபேசி எண்ணையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி பெற்றுள்ள பாலிசிதாரர்கள் ஏற்கனவே தங்களது தொலைபேசி எண்ணை பாலிசியில் குறிப்பிட்டு இருந்தால் இந்த எண் மிகவும் பயன்படும்.
வாட்ஸ் அப் மூலம் எல்ஐசி காப்பீடுக்கான பிரிமியம் ,செலுத்த வேண்டிய தொகை, நேரம், பாலிசிக்கான போனஸ், பாலிசியின் தற்போதைய நிலை, கடன் பெறுவதற்கு தகுதியானவரா, கடனை திருப்பி செலுத்தும் முறைகள், கடனுக்கான வட்டி முறைகள், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த whatsapp மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.