40 கோடி இந்தியர்களில் 20 கோடி பேர் கடன்காரர்கள்..!
சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கொண்ட இந்திய மக்களிடத்தில் கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள், சிக்கல்கள் குறித்த பெரிதாக சிந்திப்பதில்லை.
டிவி.,பிரிட்ஜ், வாசிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள், அத்தியாவசியத் தேவையாக எப்போது இந்திய மக்கள் எப்போது கருதத் தொடங்கினார்களோ அப்போதே ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன் வழங்கும் நிறுவனங்கள் பெருகத் தொடங்கின. இ.எம்.ஐ.யில் பொருட்கள் வாங்குவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.
இந்நிலையில் சி.ஐ.சி. எனும் கடன் தகவல் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வு குறித்த ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், “வங்கிகள் தொழில் கடன் வழங்குவதில் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்த வேலையில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட நுண்கடன் திட்டம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து பொதுத் துறை வங்கிகளும் இந்த நுண்கடன் திட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவை சில்லரை கடன் வழங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளன.
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40.07 கோடி பேர் ஆகும். இதில், சில்லரை கடன் சந்தையில் கிட்டத்தட்ட, 20 கோடி பேர் கடன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள், குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சி.ஐ.சி. மேற்கொண்டு ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் பெரும் சுவாரஸ்யம் என்னவென்றால், புதிதாகக் கடன் பெறுவோர், தங்களுக்கு முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனத்திற்கே அதிக விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மனதில், முதன் முதலாக கடன் வழங்கிய நிறுவனம் குறித்து, சாதகமான சிந்தனை இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.