பான் எண் இல்லாவிட்டால், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளை பெருவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது.
இதுவரை இணைக்காதவர்கள், வரும் 31ஆம் தேதிக்குள் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், பான் எண் இல்லாவிட்டால், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குதல், வருமான வரி தாக்கல், பங்குச் சந்தை பரிவர்த்தனை உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
எனினும், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை வாங்கியவர்கள், வரும் 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


