50% தள்ளுபடியுடன் திருச்சியில் பார்சல் சர்வீஸ்! பொருட்கள் இருக்கும் இடத்திலேயே ஆர்டர் புக்கிங்
திருச்சி பழைய பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரில் துரியோதனா ட்ரான்ஸ்போர்ட் & பார்சல் சர்வீஸ் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிறுவனம் குறித்து, நிர்வாக இயக்குனர்கள் ஏ.சதீஷ் மற்றும் எஸ்.ஆயிஷா பர்வீன் கூறியதாவது:
பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து எளிமையாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் விதமாக பொருட்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஆர்டர் புக் செய்து பெற்று கொள்ளும் சேவையை திருச்சியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இங்கு, அனைத்து பொருட்களுக்கும் காப்பீட்டு வசதியுடன் பாதுகாப்பான முறையில் டோர்டெலிவரி வசதியுடன் கூடிய ட்ரான்ஸ்போர்ட் & பார்சல் சர்வீஸ் சேவையை செய்து தருவதாகவும், மேலும் கூடுதல் சலுகையாக விவசாயம் சார்ந்த பொருட்கள், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனுப்பும் கல்வி பொருள்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி வழங்குவதாகவும் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பார்சல் புக்கிங் செய்து தரப்படுகிறது.
திருச்சியில் முதன்முறையாக துவங்கியுள்ளோம். இதுமட்டுமின்றி விரைவில் இந்தியா முழுவதும் கிளைகள் தொடங்கப்பட உள்ளதாக கூறினர்.
மேலும் துரியோதனா ட்ரான்ஸ்போர்ட்& பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் 1800 309 3066 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ 75400 70075 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றனர்.