குழந்தைகள் சிறந்த நிதி நிர்வாகியாக மாற பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டியது!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிதிநிர்வாகம் குறித்த புரிதலை சொல்லித் தருவதில்லை. குழந்தைகளின் தற்கொலைக்கு பணம் பற்றிய புரிதலை கற்றுத்தராதும் ஒரு காரணமாக உள்ளது. குழந்தைகளை சேமிக்க சொல்வதற்கு முன்பு செலவு செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் கடைக்கு போய் பொருள் வாங்க பழக்கப்படுத்துவதால் பணம் பற்றிய புரிதல் தெரிய வரும். அவர்களின் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து பணம் போட சொல்ல வேண்டும்.
இரு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒரே பிஸ்கட் பாக்கெட் கொடுத்து இருவருக்கும் பிரித்து சாப்பிடும்படி சொல்லலாம். இதனால் குழந்தைகளுக்கு இடையே பாசம் என்பது நிலைத்து நிற்கும்.
பிள்ளைகள் கல்லூரி போக ஆரம்பித்ததும் வீட்டு நிர்வாகத்தை அவர்களிடம் கொடுத்து நிர்வகிக்க பழக்கப்படுத்த வேண்டும். வியாபாரம் செய்யும் பெற்றோர்கள் தங்கள் நிறுவனத்தில் லாப, நஷ்ட விவரங்ளை குழந்தைகளிடம் பகிரலாம்.
உங்களிடம் வசதி வாய்ப்பு இருந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு பஸ்சிலேயே அனுப்பலாம். பாக்கெட் மணியும் அதிகமாக தரக்கூடாது. பணம் இல்லாமல் கூட வாழ முடியும் என்பதை கற்றுத்தர வேண்டும்.
சிறுவயதிலேயே பணத்தின் மதிப்பு தெரிந்து கொண்டால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த நிதி நிர்வாகியாக உருவாக்க முடியும்.