வெளிநாடு பயணம் செல்வதற்கான பாஸ்போர்ட் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி பாஸ்போர்ட் எடுப்பதற்கு பாஸ்போர்ட் மையங்களை மட்டுமே தேடி ஓடாமல் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு தபால்துறையின் http://www.indiapost.gov.in என்ற இணைய தளங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.
ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்கும் போது அதற்கான கட்டணத்தை யும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன் பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற தேவையான ஆவணங்களுடன் அவர்கள் அழைக்கும் தேதியன்று தபால் நிலையம் செல்ல வேண்டும்.
ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரரின் கைரேகை மற்றும் கண் ரேகை எடுக்கப்படும். அனைத்து பணிகளும் முடிந்து 15 நாட்களில் விண்ணப்பப் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் பாஸ்போர்ட் கிடைக்கும்.