ஆதாரில் மாற்றம் செய்வதற்கு நீங்கள் இனி ஆபிஸிற்கு லீவ் போட்டு ஆதார் சேவை மையத்தை தேடி ஓட வேண் டிய தேவை இல்லை. உங்கள் மொபைல் போன் மூலமே உங்களுக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் கணினியில் https://uidai.gov.in/என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஆதாரில் நீங்களே திருத்தங்களை செய்து கொள்ளலாம். பெயரில் திருத்தம் செய்வதற்கு பாஸ்போர்ட், பான் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, பென்சன் அட்டை உள்ளிட்ட 32 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பிறந்த தேதியை மாற்றுவதற்கு பிறப்புச் சான்றிதழ் நகல் தேவைப்படும். பாலினத்தை மாற்றுவதற்கு மொபைல் நம்பர் ஓடிபி சரிபார்ப்பு மற்றும் முக சரிபார்ப்பு செய்யப்படும். பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றுவதற்கு மொபைல் நம்பர் கட்டாயம் தேவைப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் வாயிலாகவே இவற்றை அப்டேட் செய்ய முடியும். வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே பெயர், பாலினம், பிறந்த தேதி அப்டேட் செய்ய முடியும். மொபைல் நம்பரை அப்டேட் செய்ய கட்டாயம் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அப்டேட் செய்வதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.