வீடி தேடி வரும் பெர்சனல் லோன்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் (PAYTM), கடன் சேவையையும் தொடங்கியுள்ளது. இனி நீங்கள் தனிநபர் கடன்(Personal Loan) பெற வேண்டுமெனில், வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, வீட்டில் இருந்தபடியே பேடிஎம்மின் உதவியுடன், பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற்றுத் தர பேடிஎம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் பணம் தேவையுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சேவையை, பேடிஎம் ஆப் மூலம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இஎம்ஐ விகிதம் எப்படி? இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. பேடிஎம்மில் பெறும் இந்த கடனுக்கு 18 – 36 மாதங்களில் திருப்ப செலுத்தும் அவகாசம் கிடைக்கும். இதனடிப்படையில் உங்களது இஎம்ஐ விகிதமும் இருக்கும்.
யாருக்கு கிடைக்கும் : பேடிஎம்மின் இந்த சலுகையை வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் 24ஜ்7 நீங்கள் பெறலாம். பேடிஎம்மின் இந்த சேவையை சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர தேவைக்கு உதவிகரமாக இருக்கும் பேடிஎம் மூலம் 2 நிமிடங்களுக்குள் தனிப்பட்ட கடனை எடுக்கலாம்.
யாருக்கு நன்மை : இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் குப்தா கூறுகையில், “குறுகிய கால கடனை உடனடியாக வாங்க விரும்பும் உழைக்கும் தொழில் வல்லுநர்கள், புதிய கடன் வாங்குபவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இந்த வசதி நன்மை பயக்கும். இது அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும். அவர்களின் கனவை நனவாக்கும்” எனக் கூறுகிறார்.