போஸ்ட் ஆஃபிஸ் FD vs RD: 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் முதலீட்டில் எது அதிக வருமானத்தை தரும்?
நிலையான வைப்புத்தொகை (FD) என்பது, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்யும் விருப்பமாகும். அதே நேரத்தில் தொடர் வைப்புத்தொகை (RD) என்பது, மக்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் விருப்பத்தை வழங்குகிறது.
தங்களது வருமானத்திற்கு ஏற்ப மக்கள் அவர்களுக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகள், வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் மக்களுக்கு ஏற்ற பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும் வழங்கி வருகின்றன.
நிலையான சேமிப்புக்கு தபால் அலுவலகம் வழங்கும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் பலர் சேர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சிறுசேமிப்பு முதல் பெரிய முதலீடுகள் வரையிலான பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் தபால் அலுவலகம் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.
சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும்போது, தபால் அலுவலகம் இரண்டு பிரபலமான விருப்பங்களை வழங்குகிறது. நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) மற்றும் ஆபத்து இல்லாமல் வருமானத்தைப் பெற விரும்புபவர்களின் முதல் தேர்வாக இந்த இரு சேமிப்புத் திட்டங்களும் இருந்து வருகின்றன.
— கலிங்கா இளவழகன்.