வங்கி காசோலையினை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கிடுக்குப்பிடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.
இதற்காக காசோலை துண்டிப்பு முறை எனும் புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணம் பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதனால் காசோலை முறைகேடு நடப்பது தடுக்கப்படும் என அறிவித்துள்ளது.