பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
பிஏசிஎல் விழுந்த வரலாறு தொடர் பல்வேறு தகவல்களை தாங்கி வருகிறது. பல்வேறு விஷயங்களை அறிய உதவியாக உள்ளது.
-சாமுவேல், பெரிய மிளகுபாறை
பிஸ்னஸ் திருச்சியில் முதல் பக்கம் எப்பொழுதுமே மாஸ். இந்த வாரம் தொழிலதிபர் இனிகோ இருதயராஜின் வணிக செயல்பாடுகளையும், அவரின் வெற்றியையும் அழகான நடையில் வெளியிட்டிருந்தீர்கள். அருமை.
-ரஞ்சித் வண்ணாரப்பேட்டை
பிஸ்னஸ் திருச்சியில் ஜிஎஸ்டி குறித்த செய்திகள் இடம் பெறுவது தொழிலாளர்கள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் ஜிஎஸ்டி பற்றிய சந்தேகங்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்னும் கூடுதல் தகவல்களைச் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
-ரவிச்சந்திரன், காட்டூர்
பக்கத்துக்குப் பக்கம் பிஸ்னஸ், ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு புதுவிதமான தகவல், சிறிய தகவல்கள் முதல் பெரிய செய்திகள் வரை ஒவ்வொன்றும் நேர்த்தியாக உள்ளது.
-முகமது ரியாஸ், பாலக்கரை
பிசினஸ் திருச்சியில் திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை பார்க்க முடிகிறது. அனைத்தும் செய்திகளும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் திருச்சி புறநகர் பகுதிகள் பற்றிய வியாபார குறிப்புகள், தொழில் தொடங்குவதற்கான டிப்ஸ் கொடுத்தால் கிராமப்புற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-செல்வேந்திரன், உப்பிலியபுரம்