தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனால் இன்டர்நெட் சேவையும் 2 மாதங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், பில் அனுப்பப்பட்டுள்ளது.
பயன்படுத்தாத இன்டர்நெட் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுபற்றி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் விசாரிக்கையில், தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.அங்கிருந்து வரும் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.