மீண்டும் EMI உயரும் அபாயம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
கடந்த சில மாதங்களாக உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40% உயர்த்தியது. இதனால் பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை பணவீக்கம் விகிதம் கடந்த 8 வருடங்களை விட 7.79 விழுக்காடு உயர்ந்துள்ளது என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெப்போ வட்டி மீண்டும் உயர்த்தப்பட்டால், வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்கியோருக்கு EMI கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.