ஒருத்தர் ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கனும்னு ஆசைப்பட்டு ஷோரூம்க்கு போய் விசாரிச்சார்னா #எக்ஸ்_ஷோரூம் விலை ரூ. 2.25 இலட்சம் சொல்லுவாங்க.
சரி 2.25 இலட்சம் தானே ஒரு கிட்னியை வித்தாவது வாங்கிடலாம்னு முடிவு பண்ணி பைக் புக் பண்ணினார்னா. ஆர்.டி.ஓ. பீஸ், இன்சூரன்ஸ், எக்ஸ்ட்ரா பிட்டிங், லொட்டு, லொசக்னு சேர்த்து #ஆன்ரோடு பிரைஸ் 2.60 இலட்சம் வரும் சார்னு எஸ்டிமேட் போட்டு சொல்லுவாங்க.
35 ஆயிரம் எக்ஸ்ட்ரா வருமா. பிரச்சனை இல்லை. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். வாங்கனும்னு முடிவு பண்ணிட்டேன் அதுனால டெலிவரி ரெடி பண்ணுங்கனு இவர் சொன்னா..

அடுத்தால கேஸ் கட்டிட்டு வாங்க சார்னு ஒரு சேல்ஸ் இன்வாய்ஸ் நீட்டுவாங்க. அதை பார்த்ததும் இவருக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடும். அந்த இன்வாய்ஸ்ல மொத்த தொகை ரூ 3.35 இலட்சம்னு இருக்கும்.
யோவ் 2.60 இலட்சம் தான்யா சொன்னீங்க. பில்லுல 73 ஆயிரம் கூடுதலா போட்டு இருக்கீங்கனு இவர் டென்சனாவார்.
அதுவா சார் வண்டிக்கு 28 % ஜி.எஸ் டி சார்.
2024 பட்ஜெட்ல பைக்குக்கு 28 % ஜி.எஸ்.டி.யும், ஹெலிகாப்டருக்கு 5 % ஜி.எஸ்.டி.யும் அறிவிச்சு இருக்காங்களே உங்களுக்கு தெரியாதா சார்னு ஷோரும் எக்ஸ்கியூடிவ் கேட்பான்.
(இனி விவேக் ஸ்லாங்கில் படிக்கவும்)
அட பாவிகளா 2.60 இலட்சம் வண்டிக்கு 73 ஆயிரம் ஜி.எஸ்.டி. யாடா..?
அந்த 73 ஆயிரத்துக்கு ஒரு 100 சிசி புது பைக்கே வாங்கிறலாமேடா..!
3.35 இலட்சம் பேங்க்ல லோன் போட்டு புல்லட் வாங்கிறவன் கதி என்னாகும்டா பேங்க்காரன் வேற 8 % வட்டி போடுவானே..!
நான் 20 கோடி கொடுத்து ஹெலிகாப்டரே வாங்கிகிறேன் சாமி..!
எழுதியவர் – முத்துசெல்வி