2021-22 நிதியாண்டில் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) கனரா வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,210.06 கோடியாக இருந்தது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.406.24 கோடியிலிருந்து ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து ரூ.1.177.47 கோடியை தொட்டுள்ளது. நடப்பாண்டு ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 8.84 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. கடன் மற்றும் பங்குகள் மூலமாக ரூ.9,000 கோடி மூலதனத்தை திரட்ட திட்டமிட்டுள்ளதாக கனரா வங்கி வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.