யாருக்கெல்லாம் மாதம் ரூ.1,000..?
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டத் திற்கு எந்தெந்த ரேஷன் அட்டை தாரர்கள் தகுதியானவர்கள் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. தற்போது தமிழக அரசு ரேஷன் அட்டைகளை ஐந்து வகையாக பிரித்துள்ளது. எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும் என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் உள்ளது.
தமிழ்நாடு அரசு குடும்ப ரேஷன் கார்டுகளை PHH, PHH-(AAY), NPHH, NPHH-(S), NPHH-(NC என ஐந்து வகையாக பிரித்துள்ளது. இதில் றிபிபி என்பது அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் பெறலாம்.
PHH-(AAY) – இதை BPL (Below poverty line) கார்டு என்றும் அழைக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோர்க்கு வழங்கப்படும். அத்தியாவசிய பொருள்களுடன் மாதம் 35 கிலோ அரிசி வழங்கபடும்.
NPHH – : இதை APL (Above poverty line ) கார்டு என்றும் அழைக்கப்படும். முன்னுரிமை இல்லாதவர்கள், ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருள்களும், அரிசியும் உண்டு.
NPHH-(S) : – இந்த கார்டுக்கு அரிசி கிடையாது. சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் உண்டு.
NPHH-(NC) : – எந்த பொருளும் கிடையாது. அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இதை வசதி படைத்தவர்கள் வாங்கி வைத்து கொள்வார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருப்பதால் முகப்பில் குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தால் தங்களுக்கு உதவித் தொகை கிடைக்காது என்ற அச்சத்தில் பலரும் தங்களது கார்டுகளில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத் தலைவி என போடப்படும் கார்டு கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். இது தேவையற்றது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில் ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளுக்கு வழங்கப்படமாட்டாது. அதனால், யாரும் தேவையில்லாமல், ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவியாக பெயர் மாற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.