ரூ.220 கோடியாம்… நஷ்டமடைந்த கம்பெனியை தூக்கிநிறுத்த சிஇஓவின் சம்பளம்
வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் பாப் இகர்.., பொழுதுபோக்குத்துறையில் பெரிய ஜாம்பவான் நிறுவனமாக உள்ள இதன் தலைமை செயல் அதிகாரியாக பாப் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் டிஸ்னி நிறுவனத்தில் உள்ள நிர்வாக சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாப் தெரிவித்துள்ளார்.
டிஸ்னி நிறுவனத்தில் புதிய மாற்றங்களை செய்யும் பணிகளை நிதியை கையாளும் குழுவினர் கையில் எடுத்துள்ளனர். 2005 முதல் 2020 வரை இவரின் கட்டுப்பாடுகளால் நிறுவனம் நல்ல வளர்ச்சியை பெற்றிருந்தது.
அதற்கு பிறகு கரீம் டேனியல் என்பவர் இந்த பதவியில் இருந்தார்.
தற்போது மீண்டும் பாப் சிஇஓவாக அதே நிறுவனத்துக்கு திரும்பியுள்ளார். பாப் வருடாந்திர சம்பளமாக 27 மில்லியன் அமெரிக்க டாலரை பெற இருக்கிறார். மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் பணியில் பாப் களமிறங்கியுள்ளார்.
மிகமோசமான சறுக்கல்களை சந்தித்துள்ளபோது பாப் ஏற்கனவே நிறுவனத்தை மீட்டெடுத்த வரலாறை கொண்டுள்ளதால் இந்தமுறையும், வரும் 2024ம் ஆண்டுக்குள் அவர் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்பார் என்று நம்பப்படுகிறது.