சிறுபான்மையினருக்கு கடன் பெற ரூ.4.55 கோடி ஒதுக்கீடு..!
டாம்கோ மூலம் கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு 2021&-22ம் ஆண்டிற்காக சிறுபான்மை இன மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று. கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம், (போக்குவரத்து வாகனங்களுக்காக கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கேட்கும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை 94454 77835 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்