தினம் ரூ.29 முடிவில் கிடைப்பது ரூ.4 லட்சம்..!
எல்.ஐ.சி. நிறுவனம் கொண்டு வந்துள்ள திட்டங்களில் பெண்களுக்கான ஒரு சிறப்புத்திட்டம் தான் ஆதார் ஷீலா பாலிசி திட்டம்.
8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆதார் கார்டு இருந்தால் போதும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதிர்வு காலத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு அளவில் செலுத்தலாம்.
ஒரு நாளைக்கு ரூ.29 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். வருடாந்திர அளவிலோ, காலாண்டு அளவிலோ அல்லது மாதாந்திர அளவிலோ பிரீமியம் செலுத்தலாம். மொத்தம் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ.2,14,696 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் உங்க ளுக்குக் கிடைப்பதோ ரூ.3.97 லட்சம்.