திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவராக S.கந்தன் மீண்டும் தேர்வு!
திருச்சி மாவட்ட நகை அடகுப்பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பழைய பால்பண்ணை சாலையில் உள்ள ஹோட்டல் மார்விக்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் S.கந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது சங்கம் உருவாக்க சிரமப்பட்டது, தொழில் பாதுகாப்பு, இடையூறு இல்லாமல் தொழில் நடத்துவதில் உள்ள சிரமங்கள் பற்றி எடுத்துக் கூறி நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் தொழில் நடத்துவதின் அவசியம் குறித்தும் பேசினார்.
பின்னர், திருச்சி மண்டலத்திலுள்ள சங்கங்களை இணைப்பது, பகுதிவாரியாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் S.கந்தன், கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராம்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளராக தொட்டியம் கார்த்திக், மக்கள் தொடர்பு அதிகாரியாக செந்தில்நாதன் உட்பட மாவட்ட துணைத் தலைவர்கள், கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், லால்குடி, துறையூர், துவாக்குடி, பொன்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.