உப்புக்கண்டம் பிசினஸ் ரொம்ப சுவாரஸ்யம் !
இது உப்புக்கண்டமே தேடி கண்டடைந்த வளர்ச்சி.. வியாபாரம் செய்வதற்கு நான் சுத்தமா லாயக்கில்லாத ஒருத்தனா தான் என்னைய உணர்ந்திருக்கேன். எனக்கு வியாபாரம் பண்றதுல மிகப்பெரிய தடையா யோசிச்சது ஒரு பொருளை விக்கிறதுல கூட இல்லை. ஆனா இன்னொருத்தர் கிட்ட பேசி விக்கிறது . ஒரு மனுஷன் கிட்ட அணுகுவதற்கு ரொம்பவே தயங்குவேன் ஆனா இந்த உப்பு கண்டத்தை ஆரம்பிக்கும் பொழுது எனக்கு ரொம்ப பெரிய நம்பிக்கையா இருந்தது முதல்ல வந்த ரெண்டு போன் கால் மட்டும் தான்..
இதே பேஸ்புக்ல தான் இந்த உப்புக்கண்டத்தை வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன் எதார்ததமா போட்ட வீடியோ பார்த்து மாலை ராஜன் அண்ணனும் லதாவும் தான் எங்களுக்கு வேணும்னு சொல்லி கேட்டாங்க அதன் தொடர்ச்சியாக இதை வியாபாரமா மாத்தணும் சொல்லிட்டு முடிவு பண்ணேன்.
ஆரம்பத்தில் நிறைய குறைகள் அது எனக்கே தெரியும். கறி சுத்தமா தான் இருக்கும் அந்த மசாலாக்களில நிறைய தப்பு சொதப்பல்கள் இருக்கும். சில நேரம் உப்பு அளவு கூடிடும்,பேக்கிங் உடைஞ்சிரும்,
இதுக்கும் உச்சமா,உச்சி வெயில்ல கறிய காயப்போட்டுட்டு வெளில போன நேரத்துல மழை பெஞ்சு மொத்த கறியையும் தூக்கி போட்ட சம்பவம் எல்லாம் நடத்திருக்கு. இப்படி எல்லாத்தையும் தாண்டி பக்குவமா செய்ய ஒரு வாரம் வரைக்கும் மிகப்பெரிய உழைப்பை தேவைப்படும். எல்லாத்துக்குமே தீர்வை தேடி நகர ஆரம்பிச்சோம். இப்படி தேடி தேடிப்போக உப்புக்கண்டம் பிசினஸ் ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.
உப்புக்கண்டத்தோட விலை 4000 அப்டிங்கிறது பெரிய விலை தான். உப்புக்கண்டம் போடுறதுக்கு உறுதுணையா இருக்கிறது கறிக்கடை தொழில் தான். மார்க்கெட்ல ஆட்டுக்கறி ஐநூறுக்கும் கிடைக்கும் ஆயிரத்துக்கும் கிடைக்கும். எல்லோரும் எதிர்பார்க்குற சுத்தமான இளம் ஆட்டுக்கறிங்கற தரம் தான் சுவையான உப்புக்கண்டத்துக்கான முதலீடு.
அது ஐநூறுக்கு கிடைக்க வாய்ப்பே கிடையாது. அஞ்சு கிலோவுல ஆரம்பிச்ச தொழில், இப்போ மாசம் அறுநூறு கிலோ வரைக்கும் காயப்போட வச்சிருக்கு. இது உப்புக்கண்டமே தேடி கண்டடைந்த வளர்ச்சி..
உப்புக்கண்டத்த சமைக்கிறது பெரிய வேலை எதுவும் இல்ல. ஒரு அப்பளத்த பொறிக்கிறத போல ஒரு கருவாட்ட பொறிக்கிறத போல, நல்லா காய்ஞ்ச எண்ணெயில இரண்டு நிமிஷம் பொறிச்சி எடுத்தா பழைய கஞ்சி, தயிர் சோறு, சாம்பார் சோறுன்னு எல்லா சாப்பாட்டுக்கும் மெயினான சைட்டிஷ் ஆ இந்த உப்புக்கண்டம் இருக்கும்.
சில ஊரு பக்கம் தொக்கு போலவும் செய்யுறாங்க. சரியா காய வச்சிருந்தா எட்டுல இருந்து பத்து மாசம் வரைக்கும் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்.
நல்ல புரோட்டின்,சாப்பிட சாப்பிட நிறைய சாப்பிட தோணும் ஆனா மூனு நாலு பீஸ் போதுமானது. உப்புத்தண்மை அதிகமா இருக்கும் அப்டிங்கிறதால பிரெஸ்ஸர் இருக்க ஆட்கள் கொஞ்சம் கம்மியாவே எடுத்துக்கிறது நல்லது..
உப்புக்கண்டம் தேவைக்கு : 8148465212
All over India Delivery
Tamilnadu free shipping