எஸ்.பி.ஐ. வங்கிக்கே அபராதம்..!
2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான எஸ்பிஐ வங்கியின் நிதி நிலை குறித்த ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது ரிஸ்க் மதிப்பீடு அறிக்கைகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட போது, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, “கடன் வாங்கிய நிறுவனங்களின் பங்குகளை 30% அதிகமாக அடமானமாக எஸ்.பி.ஐ. வங்கி வாங்கி வைத்துள்ளது” கண்டறியப்பட்டது.
இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்ட பின்னர் எஸ்பிஐ வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானல் அன்றைய தினம் எஸ்பிஐ வங்கியின் பங்கு விலை 4.19 ஆக சரிந்துள்ளது. இந்த அபராதத் தொகையால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.