பணத்துக்கு பாதுகாப்பு
சிலர் வட்டி வருமானத்துக்காக கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்கின்றனர்.
ஆனால் இவ்வகை நிதி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது. ஆகவே, எந்த கார்ப்பரேட் நிறுவனம் அல்லது எந்த வங்கிசாரா நிதி நிறுவனத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனம் மிக அதிகமான தரக்குறியீட்டைப் (credit Rating) பெற்றிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பெற்றிருந்தால், உங்களது முதலீடு ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.
அதிக வருமானம் என்பதை மட்டும் மனதில்கொள்ளாமல், நிறுவனத்துக்கான தரக்குறியீடு எப்படி இருக்கிறது என்று அவசியம் பார்த்து, முடிவெடுப்பதுதான் பணத்துக்கான பாதுகாப்பைத் தரும்.”