மென்பொருட்களும், வணிக வெற்றியும் கேள்வி-பதில் பகுதி
1) நான் ஒரு சிறு வியாபாரி என்னுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக Shopping Cart எனப்படும் மென்பொருளை உபயோகிப்பது என்றால் எதை உபயோகிக்கலாம்?
Shopify போன்ற பொருட்கள் எனக்கு மிகவும் விலை அதிகமாக தோன்றுகிறது.உங்கள் முதலீடு குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உடனடியாக வேர்ட்பிரஸ் (WordPress) உடன் இணைந்து வரும் WooCommerce உபயோகிக்கலாம் நீங்கள் யாருக்கும் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இலவசம் என்பதால் இதில் எந்த தகுதி குறைவும் இல்லை. பெரிய வியாபாரிகளுக்கும் கூட இது போதுமானது. உபயோகித்துப் பாருங்கள் பிடித்திருந்தால் இதை தொடருங்கள் அல்லது உங்களுக்கு வருமானம் வந்த பிறகு வேறு கட்டண மென்பொருளுக்கும் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
2) தற்காலத்தில் எல்லோருமே வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக CRM எனப்படும் மென்பொருளை பற்றி பேசுகிறார்கள் ஆனால் மார்க்கெட்டில் இதன் விலை லட்சக்கணக்கில் அதுவும் இரண்டு இலக்கு லட்சக்கணக்கில் உள்ளது. இதற்கு மாற்று அல்லது இலவச CRM-ங்கள் உள்ளனவா ?
நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் இலவச CRMஅல்லது விலை குறைவான CRM-கள் சந்தையில் உள்ளன. உதாரணமாக ZOHO CRM ஒரு உபயோகிப்பாளர் அல்லது பயனாளர்க்கு எப்பொழுதும் பிரீ (Always free or Free forever) என்கிற வசதியை செய்து தருகிறது. கட்டற்ற மென்பொருள் எனப்படும் ஒப்பன் சோர்ஸ் (Open Source) CRM-கள் முற்றிலும் இலவசமாகவே, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இணையத்தில் கிடைக்கிறது. இந்தப் பொருட்களை நீங்கள் உங்களது Server- லையே வைத்துக் கொள்ளலாம் மேலும் இதை உபயோகிக்கும் பொழுது உங்களது data உங்களிடமே இருக்கும் ஆகவே டேட்டா பற்றிய கவலை தேவையில்லை.
3) நான் ஒரு வியாபாரி. எனக்கு ஃபேஸ்புக் வழியாக தேவையான ஆர்டர்கள் வந்து விடுகிறது. இருந்தாலும் ஒரு நாளைக்கு நான் நூற்றுக்கணக்கான குரூப்களில் போஸ்ட் போட வேண்டி உள்ளது. பேஸ்புக் தவிர ட்விட்டர், வாட்ஸ் அப் என்று பல்வேறு இடங்களில் என்னுடைய நேரம் விரயமாகிறது. இதை தவிர்த்து மிகக் குறைந்த நேரத்தில் நான் போஸ்ட்களை போட முடியுமா?
பதில் : முடியும். உதாரணமாக நீங்கள் பேஸ்புக்கில் போடும் அதே போஸ்ட் Twitter போன்ற இதர social மீடியாக்களிலும் தானாகவே போஸ்ட் ஆகும் விதமாக செய்ய முடியும். இது குறித்து நாம் விரிவான ஒரு கட்டுரையை பிசினஸ் திருச்சியில் எதிர்பார்க்கலாம்.
4) நான் திருச்சியில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர். நாங்கள் ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனப்படும் HMS மென்பொருள் நிறுவுவதற்கு முன்பே அதை உபயோகித்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் இதற்கு எந்த மென்பொருள் ஆவது உள்ளனவா?
Try before you buy எனும் வசதியை நீங்கள் உபயோகிக்க விரும்புகிறீர்கள். சந்தையில் இதுபோன்ற மென்பொருட்கள் கிடைக்கின்றன அல்லது உங்களது அருகிலுள்ள யாராவது ஒரு மென்பொருள் ஆலோசகரிடம் நாங்கள் உங்களது மென்பொருளை வாங்குவதற்கு முன்பு நன்றாக உபயோகித்து பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள் அவர்கள் ஏற்பாடு செய்வார்கள் உங்களது யோசனை நல்ல யோசனை ஏனெனில் பின்னாளில் பிரச்சினை வருவதை விட முன்பே அனைத்து விஷயங்களையும் நன்கு தெரிந்து கொண்டு இறங்குவது சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
5) நான் திருச்சியில் புகழ்பெற்ற ஒரு பள்ளியின் தாளாளர். சமீபகாலமாக எங்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் உதாரணமாக Python எனப்படும் சமீபத்திய கணினி மொழி சிலபசில் உள்ளது உண்மையில் இதை நடத்துவதற்கு எங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. மென்பொருள் அவுட்சோர்சிங் செய்வதுபோல டீச்சிங் அவுட்சோர்சிங் செய்யலாமா இது சரியா தவறா?
பதில் : தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் மொழி தெரியாத ஒரு ஆசிரியரை வைத்து உங்கள் மாணவர்களை தேர்வில் வெற்றி அடைய செய்வது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியும். உங்களைப் போன்ற முதலாளிகள் அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இண்டஸ்ட்ரியில் கணினித்துறையில் மென்பொருள் தயாரிப்பில் இருப்பவர் கள் இந்த மொழியை எளிதாக சொல்லித் தருவார்கள் அவர் களை அணுகுவது தவறு இல்லை.
உங்களைப்போன்ற பள்ளிகள் மட்டும் அல்லாது எனக்குத் தெரிந்த கல்லூரி தலைவர்களுமே இந்த குற்றச்சாட்டை என்னிடம் பகிர்ந்து கொண்டு உள்ளனர் எப்பொழுதுமே இதுபோன்ற பற்றாக் குறைகள் சகஜம். உங்களைப் போன்ற முதலாளிகள் தங்கள் மதிநுட்பத்தால் இதை வெல்கிறார்கள். மறந்துவிடாதீர்கள் இந்தியாவிற்கு software அவுட்சோர்சிங் முறையில் நிறைய வருவாய் கிடைக்கிறது இந்த முறை கல்வித்துறையிலும் வரட்டுமே!
மேலும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இவரை தொடர்பு கொள்ளலாம். காத்த பெருமாள் பரிமணம். மென்பொருள் ஆலோசகர், Kathaperumal Parimanam, Software Consultant, 93451 04090