எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார், பான்கார்டு இணைக்கும் வழி
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான்கார்டை ஆதார் உடன் இணைப்பது கட்டாயமாகும் என்று சிபிடிடி அறிவித்திருந்தது. இணைப்பிற்கான காலக்கெடுவை பல்வேறு முறை அறிவித்தும் நீடித்தும் வந்தது. கடந்த 2020, 30 ஜூன் மாதத்திற்குள் இணைக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இணைப்பிற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இணைப்பதோடு SMA மூலம் எளிதாக இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் செல்போனில் UIDPAN(space)12 இலக்க ஆதார் எண் (space) 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்து 567678 அல்லது 56161 ஆகிய இரு எண்களில் ஏதேனும் ஒரு எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். உங்கள் கோரிக்கையின் நிலவரம் குறித்து SMS வாயிலாகவே மொபைலுக்கு பதில் வரும். இரு கார்டுகளிலும் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஒத்துப்போனால் ஆதார்-பான் கார்டுகள் இணைக்கப்பட்டுவிடும்.