திருச்சியில் டாம்கோ தரும் சிறப்பு கடன் உதவி
சிறுபான்மையினருக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் என பல்வேறு கடன் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்தாண்டு சிறுபான்மையின மக்கள் பயன்அடையும் வகையில் டாம்கோ கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.6லிருந்து ரூ8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் ஜாதிச்சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் விபரம், திட்டஅறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கேட்கும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சியில் ஷ்ஷ்ஷ்.பீதீநீஷ்tக்ஷீஹ்@ஸீவீநீ.வீஸீ இணையத்திலும், றிலீ : 0431-2401860 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.