Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை

 

திருச்சி மாருதி மருத்துவமனை, ஸ்டெம் செல் தெரபி மூலம் மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெற்றது.

மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு மற்றும் முதுகெலும்பில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

இதுவரை வலிநிவாரணி மருந்துகள், ஸ்டீராய்டு ஊசி மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகள். இந்த சிகிச்சைகள் நல்ல நிவாரணம் அளிக்காத நிலையில் நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

2 மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் DCGI, FDA உலகிலேயே முதன்முறையாக மூட்டு வாதத்திற்கான ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்தது.

ஸ்டெம்ஒன் எனப்படும் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை தயாரிப்பு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு அல்கெம் நிறுவனம் மூலம் கிடைக்கும். இன்று மாருதி மருத்துவமனை மூட்டுவாத நோயாளிக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்கும் முதல் மருத்துவமனையாக மாறியுள்ளது.

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன  ஸ்டெம் செல் சிகிச்சை
திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை

மாருதி மருத்துவமனையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவி கூறுகையில், முதன்முறையாக மூட்டு வியாதிக்கான ஸ்டெம் செல் சிகிச்சையை தமிழகத்திலிருந்து தொடங்கினோம் என்பதில் பெருமையடைகிறோம். ஏனெனில் தமிழக அரசு ஸ்டெம் செல் சிகிச்சையை ஊக்கப்படுத்துகிறது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மூலம் மாநிலத்தின் ஏழை நோயாளிகளுக்கு அதிநவீன ஸ்டெம் ஆராய்ச்சியை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஸ்டான்லியின் ஸ்டெம் செல் ஆய்வகம் கடந்த 14 ஆண்டுகளாக ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு, கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தவும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும் ஆராய்ச்சி செய்கின்றது.

திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை
திருச்சி மாருதி மருத்துவமனையில் மூட்டுவாதத்திற்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சை

மேலும் தமிழகத்தில் உள்ள சிஎம்சி வேலூர் மருத்துவமனை குழந்தைகளின் எலும்பியல் பிரச்சனைக்கான ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி, நீரிழிவு நோயால் காலில் ஆறாத புண்கள் உள்ள நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்கிய இந்தியாவின் முதல் மருத்துவமனை மாருதி மருத்துவமனையாகும். ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குப் பிறகு இன்று வரை இந்தியா முழுவதும் 75 மருத்துவர்கள் ஆறாத நீரிழிவு புண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்தியுள்ளனர். இரண்டாவது தயாரிப்பு விரைவில் கிடைக்கும் என்று 1 வருடத்திற்கு முன்பு அன்று குறிப்பிட்டது போல் இன்று மூட்டு வாதத்திற்கு இந்த ஸ்டெம் செல் தெரபி நடக்கிறது. அடுத்த ஒரு வருடத்திற்குள் க்ரோன்ஸ் நோய் எனப்படும் நாள்பட்ட வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மூன்றாவது நோய்யை ஸ்டெம் செல் சிகிச்சை செல் மூலம் குணப்படுத்த இந்திய அரசால் அனுமதி அளிக்கப்படும்.

நரம்பியல், இதயம் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிற நோய்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சைகளைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மருந்துகள் எப்பொழுதும் சில பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால், இது போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் பயன்பாட்டை இது குறைக்கும்.

இன்று உலகிலேயே இரண்டு நோய்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படும் ஒரே நாடு இந்தியாதான். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் அல்லது பிற நாடுகளில் மூட்டு வாதம் அல்லது ஆறாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சைகள் பெற விரும்பினால் இந்தியாவுக்கு மட்டுமே வந்து சிகிச்சை பெற வேண்டும்,

ஏனெனில் அந்த நாடுகளில் அரசாங்கங்கள் இந்த ஆராய்ச்சியில் மிகவும் தமதமாக ‘செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டான்லி, CMC தவிர AIIMS டெல்லி, சண்டிகர், மும்பை Sion மருத்துவமனை, ஹைதராபாத் டெக்கான் மருத்துவமனை ஆகியவை இந்தியாவின் பிற ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சி மையங்களாகும்.

தமிழ்நாடு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடுமையான முழங்கால் வலி மற்றும் முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இந்த ஸ்டெம்செல் சிகிச்சையை வழங்க முடியும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.