வாரவிடுமுறையில் ஜோதிடம் படித்து கைநிறைய வருமானம் பெற.. ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயாவின் திருச்சி கிளைக்கு வாங்க…
வாரவிடுமுறையில் ஜோதிடம் படித்து கைநிறைய வருமானம் பெற.. ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயாவின் திருச்சி கிளைக்கு வாங்க…
தனி மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வேத சாஸ்திரத்தின் முக்கிய அங்கமான ஜோதிட சாஸ்திரத்தைக் கொண்டு, வாழ்க்கையில் ஏற்படுகின்ற அத்துனை சுக துக்கங்களையும் அறிந்து கொள்ள இயலும். அதாவது ஒரு ஜீவாத்மாவின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள விஷயங்கள் பற்றிய நிலைப்பாட்டினை தெளிவாக அறிந்து கொள்வதற்கு பெருமளவு உதவக்கூடிய ஒரே சாஸ்திரம், இந்த ஜோதிட சாஸ்திரம் ஆகும். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கால தேச வர்த்தமானங்கள், பருவகாலங்கள், இயற்கைச் சீற்றங்கள், மற்றும் சமூக நிலைப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு பேருதவி புரிகிறது.
ஒரு ஜீவாத்மாவிற்கு அனைத்து நிலைகளிலும் உதவக்கூடிய சாஸ்த்ரம் இந்த ஜோதிட சாஸ்த்ரம். குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பதற்கும், திருமணப் பொருத்தங்களின் போதும், புதிய தொழில் துவங்கும் போதும் மற்றும் வாழ்க்கையில் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், சங்கடங்களையும் சந்திக்கும் பொழுதும் மட்டுமே பெரும்பாலானோர் இந்த ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு ஜீவன் தாயின் கருவறையில் இருக்கும் போது செய்யப்படுகின்ற பும்சவனம், வளைகாப்பு, சீமந்தம் போன்றவைகளுக்கும், குழந்தை பிறந்தவுடன் எந்த எழுத்துக்களில், எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்கும், பிறந்த குழந்தையை முதன் முதலில் தொட்டிலில் இடுவதற்கும், பிறப்புத் தீட்டு நீங்குவதற்கும், பெயர் வைப்பதற்கும், அரைஞாண் கயிறு அறிவிப்பதற்கும், முதல் வஸ்திரம் உடுத்துவதற்கும், அன்னப்பிராசனம் எனப்படும் முதன்முதலில் சோறூட்டுவதற்கும், முடி இறக்குவதற்கும், காது குத்துவதற்கும், முதலாண்டு நிறைவான ஆயுஷ்ய ஹோமம் நிகழ்த்துவதற்கும், வித்யாரம்பம் செய்வதற்கும், வளர்ந்த பின்பு விவாகம் செய்வதற்கும், முக்கிய நிகழ்வான மாங்கல்யம் செய்தல், சாந்திமுகூர்த்தம் (நிஷேகம்) போன்ற முக்கிய சடங்குகளுக்கு முகூர்த்தம் குறிப்பதற்கும், உதவுவதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோர் வாழ்க்கையில் சந்திக்கின்ற நிகழ்வுகளான புத்தாடை உடுத்த, வாகனம் வாங்க, முதல் பிரயாணம் செய்ய, கிருஹாரம்பம் செய்ய, கிரஹப்பிரவேசம் செய்ய, புது ஆபரணம் அணிய, வியாதிக்கு மருந்துண்ண, வியாதியஸ்தர் குளிக்க, பிரயாணம் செய்ய, தொழில் துவங்க, கடன் கொடுக்க, கடன் வாங்க போன்றவற்றிற்கும் உதவுகிறது. மேலும் பிறப்பு, ருது, இறப்பு கால தீட்டு விவரங்களையும், ஜீவாத்மாவின் வசிப்பிடம் தொடர்பான வாஸ்து சாஸ்திரத்தையும் அதோடு சகுன நிமித்த சாஸ்திரங்களையும், கனவு பலன்களையும் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு ஜீவாத்மா சந்திக்கின்ற மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், ஏமாற்றம் துயரம் சங்கடங்கள் ஏற்படுகின்ற காலங்களையும், விபத்து காலத்தையும், அறிந்து கொள்வதற்கும் பேருதவி புரிகிறது.
நமது வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் சந்திக்கின்ற தோல்விகள் மற்றும் சங்கடங்களிலிருந்து விடுபடுவதற்கும், ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்கும் மிகச் சிறந்த பரிகாரம் ஒன்று உண்டென்றால் அது ஜோதிட சாஸ்திரத்தை அறிந்து கொள்வது மட்டுமே.
அனைத்து தரப்பு மக்களும் ஜோதிட ஞானம் பெற இறைவன் அனுக்ரஹிக்க வேண்டும் என்று இறைவனிடம் சங்கல்பம் செய்து கொண்டு, கடந்த 15 ஆண்டு காலமாக, பல்லாயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களை உருவாக்கிய தேனி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் தனது 33 – வது புதிய ஜோதிட பயிற்சி வகுப்புகளை தமிழகம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள 90 கிளைகளில் தற்போது துவங்கி உள்ளது. மேலும், இவ்வகுப்புகள் தொர்ந்து பிரதி வாரம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் தொடக்கப்பள்ளியில் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இதுகுறித்து, ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் திருச்சி மைய பயிற்சியாளர் ஜோதிடர் உமா மகேஸ்வரன் கூறும்போது:
மிகச்சரியான ஜோதிட சாஸ்திரத்தை பொதுமக்களுக்கு போதித்து, ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சாஸ்திரத்தை பூரணமாக பின்பற்றி தானும் வாழ்ந்து கொண்டு. சமூகத்தில் இருக்கும் நபர்களையும் வாழ செய்வதற்கு மாணவர்களை தகுநிலைப்படுத்துவது.
ஆன்மீகமும் ஜோதிடமும் இரு கண்களைப் போன்றது. இதற்கு உயிராக இருப்பது நமது சனாதன தர்மம் ஆகும். இதில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய வேதம், சாஸ்திரம் மற்றும் இதிகாசங்கள் தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள செய்யும் விதமாக செயல்படுவது.
கர்ம வினைகளின் படியே ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் சுகதுக்கங்கள் ஏற்படுகின்றன. அவரவர் செய்த வினைப்பதிவுகளே அவரவர் பலன்களுக்கு காரணம் என்பதை உணரச் செய்து, அவற்றை எதிர்கொள்ளும் மனோபக்குவத்தை மாணவர்களுக்கும், அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவது.
ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் அவரவர் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்கின்ற பக்குவமற்ற நிலையை மாற்றி, அனைத்தும் இறைவன் நிகழ்த்துகிறார் அவரின் ஆணைப்படியே அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன என்கின்ற அடிப்படை ஞானம் அனைவருக்கும் ஏற்படும் விதமாக செயல்படுவது.
புகழ், பொருள், மோகம் இவைகளால் கிடைக்கும் இன்பம் தற்காலிகமானது என்கின்ற உயரிய ஞானத்தை மாணவர்களை அடையச்செய்து ஜீவன் முக்தி நிலையை அடைவதே பிறவியின் பயன் என்பதையும் உணரச் செய்து அதற்கு மிக எளிமையான வழி சரணாகதியே என்பதையும் மாணவர்களுக்கு மிக ஆழமாக புகட்டுவது.
பாரம்பரிய மிக்க நமது பாரத தேசத்தின் சிறப்புமிக்க பண்பாடு, கலாச்சாரங்களுக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு அவற்றை முறையாக பின்பற்ற செய்வது.
சுய ஒழுக்கமே மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். மேலும் மிகச்சிறந்த சமூக சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் ஆதலால், ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பதை போதித்து மாணவர்களை சுய ஒழுக்கத்தோடு வாழச்செய்வதற்கான அறிவுரைகளை வழங்குவது.
ஜீவாத்மா பிறப்பு முதல் இறப்பு வரையிலும் இறப்பைத் தொடர்ந்து ஓர் ஆண்டுகள் வரையும் 40 விதமான சம்ஸ்காரங்கள் நமது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அவை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி நமது சாஸ்திரங்கள் உணர்த்தும் சம்ஸ்காரங்களை பின்பற்ற செய்வது.
சாஸ்திரங்களை பின்பற்றுவது ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது என்கின்ற தெளிவை மக்களை உணரச் செய்து, சமூகத்தில் இருக்கும் பொதுமக்களை புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியங்களை பின்பற்றி சாஸ்திரத்தின் வழியில் வாழச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்வது.
இப்புதிய பயிற்சி வகுப்பில் ஜோதிடத்தின் அடிப்படை, ஜாதக கணிதம், வாஸ்து, எண்கணிதம், பஞ்சாங்க நுணுக்கங்கள், நாடி ஜோதிடம் உட்பட ஜோதிட சாஸ்திரத்தின் அனைத்து நிலைகளும் பயிற்றுவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். தமிழ் எழுத படிக்க தெரிந்த ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம் என்றும் மேலும், ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறுகின்றன. என்றார். இது தொடர்பான விபரங்கள் தேவைப்படுவோர் 99445 91257 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.