திருச்சியில் புதுப்பொழிவுடன் சுகந்தி டிஜிட்டல் ஆட்ஸ் திறப்பு
திருச்சி பாரதியார் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகில் நல்லி சில்க்ஸ் எதிரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது சுகந்தி டிஜிட்டல் ஆட்ஸ் நிறுவனம். தொடக்கத்தில் பிளக்ஸ் பிரிண்டிங் மட்டும் செய்து வந்தனர்.
இதில் புதுமை, நவீன முறையில் அச்சு தரம், வியக்க வைக்கும் டிஸைன் என சிறப்பான முறையில் அச்சிட்டு தந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சீராக வளர்ச்சி பெற்றது. தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய பொழிவுடன் 11.07.2022 முதல் தனது மேம்படுத்த பட்ட விற்பனை சேவையை தொடர்கிறது.
சிறப்பு பூஜைகள் செய்து நடைபெற்ற நிகழ்ச்சியின் பின்னர் இதன் உரிமையாளர் ராஜா கூறுகையில் தற்போது நாங்கள் பிளக்ஸ் போர்டு, வினைல் போர்டு மட்டுமல்லாமல் லைட் போர்டு, போம் போர்டு, திருமண அழைப்பிதழ், தாம்பூல பைகள், போட்டோ பிரேம்கள், விசிட்டிங் கார்டு, சன்பேக் ஷீட்கள், கைதட்டி, லெட்டர் பேட், பில் புக், விசிட்டிங் கார்டு, ஸ்டார் பிளக்ஸ் லேமினேசன் உட்பட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் இருந்து செய்து தருகிறோம்.
இதுவரை கடைபிடித்து வரும் சிறந்த தரம், குறித்த நேரத்தில் டெலிவரி போன்ற வற்றை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றார். மேலும் திருமண அழைப்பிதழ்கள் ரூபாய் 3 முதல் 500 வரையில் அனைத்து வகையிலும் எண்ணற்ற மாடல்களில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார்.